Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Thursday, April 11, 2013

சிந்தி விடாதே !

Copyright : www.loverofsadness.net

டி என்னவளே ! -உன்
கருவிழி மேகங்கள்
கண்ணுக்குள் மோதிக்கொண்டு
கருங்குளத்து நீர்
கன்னங்களில் வழியும் பொது - என்

தயக் குளத்தின்
செந்நீர் சிதறி
சாலையில் ஓடுதடி- என்னை
சோகத்தில் வாட்டுதடி.

ழிகின்ற நீர் - உன்
வாய்க் கமலத்தில்
வடிந்து விட்டால் - நீ
மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் 

தயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி

ண்கள் தான் காதலின் பிறப்பிடம்
கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன்
கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம்
நான் சொல்கிறேன்.

சிந்தி விடாதே - என் செல்லமே !
கண்ணீரை மட்டுமல்ல - என்
காதலையும் தான்.                 



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Friday, March 15, 2013

போர்வை !

Copyright : Flickr.com

ன்னை நான் போர்த்திக்கொள்ள
என்னை நீ போர்த்திக்கொள்ள - போர்வையை
போர்த்திக் கொண்டது கட்டில்.

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, February 21, 2013

முதல் காதல்

Copyright : Google

ன் முதல் காதல்
அவளோடு ….

யார் அவள்?
நானும் அறியேன்.

பெயர்?
சில வருடங்களுக்கு முன்பு தான்  எனக்குத் தெரிந்தது .

ஊர்?
எங்கு வேண்டுமானாலும் இருப்பாளாம்.

அவளைப் பற்றி?
நிச்சயமாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவள் தான்.

எப்படி அறிமுகமானாள் ?
மின்னல் ஒளியில் அவள் தெரிந்தாள் – என்
மனதை உடன் பறித்தாள்.

பார்ப்பதற்கு ?
தண்ணீர் முகம்
கூரிய முக்கு
அரை குறை  உயரம்
அழகிய உதடு
உதடு கொண்டு என் தாகம் தீர்ப்பாள்
என் உள்ளத்தில் என்றும் அவள் வாழ்வாள்.

எவ்வளவு நாள் காதல்?
விவரம் தெரியும் முன்பிலிருந்தே.

உன் காதல் பரிசு?
முத்தம்.

அவள் பரிசு?
பதில் முத்தம்.

கைப்பேசி காதல்?
அவள் ஊரில் வசதி இல்லை.

பிறகு பேசிக்கொள்வது?
எப்போதாவதுதான்.

விளையாடுவீர்களா?
காகிதக் கப்பல் விடுவதுண்டு.

சத்தமிடுவாளா?
எக்கச்சக்கமாக.

கோபப்படுவாளா?
ம் ….. ம் …..
கோபப்படும் போது – சில சமயம்
கொலையும் செய்வாள்.

அது …. ? இது …..?
சீ …… சீ ….
அப்படியொன்றும் இல்லை.
அவள் புனிதம் கெட்டுவிடக்கூடாது – என்று
நான் புனிதம் காக்கிறேன்.

அவளை விட்டுப்  பிரியும் பொழுது?
நான் படுத்துக் கொள்வேன் உடல்நிலை சரியில்லாமல் .

யாருக்கேனும் அவளைப் பிடிக்குமா?
குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கும்
எனக்கும் தான்;
பெரியோர்களுக்கு அவள் கசக்கும்
என் பெற்றோருக்கும் தான்.

மாமனார் மாமியார் பார்த்ததுண்டா?
தூரத்திலிருந்து.

அவள் பார்த்ததுண்டா?
என்னைச் சந்திக்க வரும்பொழுது….
என்ன அவள் வருவதைப் பார்த்தால்
இவர்கள் கதவடைத்து விடுவார்கள்
ஜன்னல்கள் உட்பட.

அவளைப் பற்றி கவிதை எழுதியதுண்டா?
அவள் ஒரு கவிதை
அவளைப் பற்றி எழுதாதவன் கவிஞனில்லை.

அவளைப் பார்க்க வேண்டுமே?
ஜன்னல் திறந்து வையுங்கள் – உங்கள்
வாசல் வழி நடந்து போகலாம்.

எப்போது திருமணம்?
பொறுங்கள், மகனைக் கேட்டு சொல்கிறேன்.

மகனா?
இப்பொழுது அவன் தானே அவளைக் காதலிக்கிறான்.

என்ன?
அட, மழையைக் காதலிக்காத மழலை உண்டா?
நானும் காதலித்தேன் அவளை – என்
மழலைப் பருவத்தில்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, June 27, 2012

உன் பேர் என் பேர் சேர்த்துவைத்தால் !

Photo Courtesy : sortol.com




 உன் பேர்
என் பேர் சேர்த்துவைத்தால்
காதல் வந்து பிறக்குமா ?
காதல் வந்தால்
நொடிகள் கூட
காத்திருக்கும் தெரியுமா ?

நீஉண்ட தேநீர் உண்டு
இனிப்புச் சேர்க்கச் சென்றேனடி;
இதழோடு இதழ் சேர்த்து
தேநீர் கசக்க செய்தாயடி !

சிறு சிறு முத்தம் கேட்டு
சிறுகச் சேர்த்தேன் என்னை
முழுதாய் கட்டி அனைத்து
மொத்தம் தொலைத்தாய் பெண்ணே !

விரலோடு மழைகோர்த்து
வழிகள் நூறு சென்றேனடி
வழியெங்கும் நீயே நின்றால்
பாதை எங்கே காண்பேனடி!

குறு குறு  குழைந்தையெனக்
கண்சிமிட்டி பார்த்தேன் உன்னை
விளையாட்டாய்ப் பிடுங்கிச் சென்றாய்
விழியோடு இதயம் தன்னை!

மைக்கும் நொடி மறைவாயெனில்
இமைகள் வெட்டி எறிந்திடுவேன் - உன்
இதழ்கள் தரும் சூட்டில் தானே
தினந்தோறும் உயிர்த்தெழுவேன்.


  - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, April 10, 2012

கவிதையாய் சில கிறுக்கல்கள்

மரண நாள்


Photo Courtesy : ifreewallpaper.com

ன் பார்வையால்
என்றோ எரிந்து விட்ட நான்
மறுபடியும் எரிக்கப்படுகிறேன் ! - இன்று எனக்கு
மரண நாள்.


முதல் எழுத்து

Photo Courtesy : http://prozailirika.ru

 யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.

தற்கொலை 


Photo Courtesy : midiaextra.com

ன்பே!
தற்கொலைக்கு நான் எதிரி தான்
இருந்தாலும் என்ன செய்ய …
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் – என் வார்த்தைகள்
அதைத் தானே செய்கின்றன.


கல்லறை

Photo Courtesy : bp6316 @ Flickr


ல்லுக்குள் ஈரம் – என்
காதலியின் கண்ணீர் – எனது
கல்லறையில்..

 மழைக்காதல்

Photo Courtesy : http://www.wallpapermania.eu

ன்றைய இல்லங்கள் அனுமதிக்கின்றன
காதலையும் மழையையும்
தொலைக்காட்சிப்பெட்டிக்குள் மட்டும்.



 -சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Wednesday, March 14, 2012

உயிர்ப்பார்வை


Hi "satya" hw r u?. "this sarath". first of all i m big fan of ur cute and sweet lines, may be i can say addict to your each words.that y i have request to you.
can you u make a short romantic words as a poet for be lowed pic. can u do it for me??????

 my heart expecting this pic on ur blog wit your lines

thank you

with regards,
sarath 
 
 பிப்ரவரி 23 , Jackee Sarath இடம் இருந்து வந்த மின்னசல் வரிகள் இவை ! உங்கள் அன்பிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பா !


 
தீப்பற்றி எரியும் -  என்
தேகமெல்லாம் - உன்
தீர்த்தப்பார்வை
தெளித்தாலென்னடி?

காதல் கடலில்
தத்தளிக்கும்
படகென்னை பார்த்துச்
சென்றாலென்னடி?

னி பொழியும் இரவில்
இமை மூடும் நொடியில்
இதழில் கனிரசம்
பகிர்ந்தாலென்னடி?

ளில்லா மழையில்
ஆழியின் நடுவில்
காமக்கடலில்
மிதந்தாலென்னடி?

பேசாத பொழுதுகளில்
பேதளித்துத் திரிகையில்
பேச்சு முத்தம்
தந்தாலென்னடி?

தேநீர்பருகும் பொழுதுகளில்
தேகம் தாகம் தேடுகையில் - உன்
இதழ்நீரால் இனிப்புச்சுவை
செய்தாலென்னடி?

யிற்றுப் பள்ளத்தாக்கில்
விழிவைத்து உறங்க - ஒரு
வாய்ப்பு
தந்தாலென்னடி?

ரவு பயணங்களில்
இருட்டு வெளிச்சத்தில்
இடைவெளியின்றி
அணைத்தாலென்னடி ?

விழிக்காத விடுமுறைகளில்
இழுத்துப்போர்த்திய இமைகளில் - உன்
இதழால் விழிவிரித்து - உறக்கம்
கலைத்தாலென்னடி ?

வையெல்லாம்
இயலாத நேரங்களில் - உன்
இமையடி உறங்கும் - என்
இதயங்களால் - ஓர்
உயிர்ப்பார்வை
பார்த்தாலென்னடி?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Friday, February 10, 2012

♥ குட்டியாய் சில காதல் கவிதைகள் ♥

Photo Courtesy : MUK Team
தாகம் தீர்க்கும்
துளி நீர் போல 
காமம் தீர்க்குமா
காதல் ? 



Photo Courtesy : http://nickstraffictricks.com


ன் 
செல்ல அதட்டல்களுக்கு
அடங்கிப் போகிறேன் 
அழகிய நாய்க்குட்டி போல ...


Photo Courtesy : motto.net.ua

  
நாட்காட்டியின் அத்தனை நாட்களும்
காதலர் தினமாய் ...
என்றோ ஓர் நாள் - அதை
நீ புரட்டிய காரணத்தினால் !


Copyright : http://hawaiiw.net


 ன்
சிறுசிறு சிணுங்கல்களில்
சிதறிப்போகும் என்னை !
சேர்த்து வைப்பது - உன்
முத்தங்களும்....
மௌனங்களும் ....


Copyright : http://slodive.com


டைசி நிமிட உறக்கம்
நம் காதல்
தொடரவும் முடியாமல் ....
பிரியவும் முடியாமல் ....



 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Sunday, November 20, 2011

கை நழுவிய நளனும் நந்தினியும் !



குறிப்பு: சில பல மாதங்களுக்கு 'நளனும் நந்தினியும்' இயக்குனர் வெங்கடேசன் அவர்களை அழைத்தேன். பாடல் குறித்து விவாதித்தோம். இசை கொடுக்கப்பட்டது. பாடல் எழுதப்பட்டது. ஆனால், காரணங்கள் சிலவால்  வாய்ப்பு கை நழுவியது. அந்த வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக ! நீங்கள் கூறுங்கள் உங்களுக்கு இந்த வரிகள் பிடித்திருக்கிறதா ?


ன்னவோ சொல்லுற உந்தன் கண்ணால
என்னத்தான் கொல்லுற உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )

ழையடிக்குது குளிரடிக்குது
மனசுக்குள்ள புயலடிக்குது .
படபடக்குது துடிதுடிக்குது
இதயம் ரெண்டும் சலசலக்குதுவே ! ( கோரஸ் )

பூ மிதிச்சு வண்டு சாகுதே !
தேன் குடிக்க மனசு ஏங்குதே !
விழியிலது மொழிகளது
நூறுகோடி உள்ளதே !
மௌனமது போதுமது
காதல் பேய் கொல்லுதே ! ( ஆண் )

பூ மிதிச்சு வண்டு அது சாகும் கதையிலே !
தேன் முடிஞ்சா பூ கசக்கும் காதல் உலகிலே !
விழியில் என்ன மொழிகள் உண்டு ? பொய் சொல்லுற !
பல பொய்கள் சொல்லும் காதலுக்கு பேய் தேவல !  ( பெண் )


ன்னவோ செய்யுற  உந்தன் கண்ணால
என்னத்தான் நெய்யுற  உந்தன் சொல்லால
தன்னால பேசித்தான் தினமும் சாகுறேன் ;
பேசாமல் பார்க்காமல் என் மனம் ஏங்கித் தவிக்குதே ! ( ஆண் )



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Tuesday, October 11, 2011

நட்பின் புதைகுழியில் !



தேவதையே !
நட்புத் தாரகையே !
காதல் தேவையோ ? - பொய்க்
காதல் தேவையோ ?

ழியெங்கும் நட்பின் சருகுகள்
மனமெங்கும் மிதிக்கும் உணர்வுகள்.
விழியெங்கும் காதல் அரும்புகள்
தினந்தோறும் மலரும் கனவுகள்.

ட்பின் காகிதம் கொடுத்து
காதல் எழுதிக் கொண்டோம்.
நட்பின் விரல் பிடித்து
காதல் பழகிக் கொண்டோம்
நட்பின் மலர் கொடுத்து
காதல் தொடுத்துக் கொண்டோம்
நட்பின் கைக்குட்டை வாங்கி
காதல் துவட்டிக் கொண்டோம்.
நட்பைப் புதைத்து விட்டு
காதல் பெற்றுக் கொண்டோம்.


காதல் தோழியே !
நட்பு மழை தந்தது;
காதல் துளி தந்தது.
நட்பு வயல் தந்தது;
காதல் நெல் தந்தது.
நட்பு தாகம் தீர்த்தது;
காதல் தாகம் தந்தது.

நாம்
நட்பு கிழித்துக்
காதல் உடுத்திக் கொண்டோம்.
காதல் கிழித்துக்
காமம் உடுத்திக் கொள்வோம்.

நாம்
கண்ணீர் குடித்து
தாகம் தீர்த்துக் கொண்டோம்.
கண்ணை விற்று
காட்சி வாங்கி வருவோம்.

ம் தோழி !
நம்முள் காதல் பிறந்திருக்கிறது ;
காதல்
காமம்
காயம்
மூன்றும் முளைத்திருக்கிறது
நட்பின் புதைகுழியில் !!!


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Sunday, September 18, 2011

கீழ்க்காணும் யாவும் காதல் கவிதைகளே !

புத்தகம் 

Copyright : http://wallpaper4free.org

னக்கான வார்த்தைகள் மட்டும் சேர்த்து - ஒரு
புத்தகம் எழுதினேன் ;
பிரித்துப்பார்த்தால்
பக்கங்களெல்லாம் - உன்
பெயர் மட்டுமே !

பசுமையாய் அவள்

Copyright : http://www.desktopwallpaperhd.net

காலத்தின் கறுப்புத் தடங்கள்
பதிந்து கிடக்கும் என் மனச்சுவர்களில் ...
பசுமையாய் அவள் நினைவுகள் ! 


முதல் எழுத்து 

Copyright : besthomedecorators.com
யிர் அழகு நானும்
மெய் அழகு நீயும் ...
உயிர்மெய் அழகை உருவாக்கும்
உன்னதமான நேரம் - இந்த
முதலிரவுக் காலம்.


ஒற்றை ரூபாய் 

Copyright : www.sparkthemagazine.com


ன்பே!
ஒற்றை ரூபாயாக 
உன் காதல் - நீ 
கொடுப்பதிலோ *
வைப்பதிலோ **
இருக்கிறது 
என் காதல்.

பின் குறிப்பு : * இத்தல் நிகழ்வு
                          ** இத்தல் நிகழ்வு.

உதடு 

Copyright : webs.com


ன்பே ! நீ 
முனுமுனுக்கும் பொழுதெல்லாம் - உன்
உதட்டுச் சுருக்கங்களில்
ஒளிந்திருக்கிறது ....
எனக்கான தமிழும்;
தமிழுக்கான கவியும்.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Monday, September 5, 2011

தொடும்தூரம் நீயில்லை !

Copyright : .tumblr.com
பல்லவி: 
தொடும்தூரம் நீ இல்லை ;
தொலைதூரம் தான் தொல்லை.
தொட்டாச்சிணுங்கி என் மனசு - தினம்
தொட்டுப் பார்க்கிறதடி உன் கொலுசு.

சரணம்:1
முத்தம் கேட்டு இம்சித்ததில்லை - உன்னை
சத்தம் போட்டு வைததுமில்லை.
நித்தம் உன்னை நினைத்ததுமில்லை - நின்னை
நினைக்காத நாள் என் வாழ்விலில்லை.

சரணம்:2
முகம் பார்த்து பேசியதில்லை;
முகப்புத்தகத்திலும் பேசியதில்லை.
முல்லைப் பூவடி உன்னுதடு;
முத்தம் கேட்டு வாடுதடி என்னுதடு.

சரணம்:3
காலம் பிரித்து வைத்த காதல்;
காயம் தந்து வைத்த காதல்.
காமன் எட்டி நின்ற காதல்;
காலன் விட்டு நின்ற காதல்.

சரணம்:4
றக்கும்வரை காதல் வாழ்வதில்லை;
இறந்தபின்பு காதல் சாவதில்லை. - நான்
இருக்கும் நொடி காதல் வீழ்வதில்லை - உன்னை
எரிக்கும்நொடி காதல் காதலில்லை.


 - சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Thursday, July 21, 2011

காதல் கொலை செய்யாதீர் !

Copyright -Wedding Photography | India@FB

தோழர் ராஜா அனுப்பிய  புகைப்படத்தில் காதலர்கள் மரத்தில் மரணம் செய்துக்  கொள்வது போல் இருந்தது. என்னுடைய கிறுக்கல்100 நண்பர்கள் இளகிய மனம் உடையவர்கள் என்பதாலும் , மேலும் காதலர்களின் அத்தகைய முடிவை நான் விரும்பாததாலும் அதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மன்னிக்கவும் ராஜா. தோழர் அனுப்பிய புகைப்படுத்துக்காக நான் கிறுக்கிய வரிகள்.


காதல் 
கொலை செய்யப்படுகின்றன 
மணக்கயிறுகளால் மற்றும்
பிணக்கயிறுகளால் ... 



- சத்தியசீலன் @கிறுக்கல்கள்100 


Wednesday, June 29, 2011

இவைகள் காதல் சொல்லும் கவிதைகள்

Copyright : favim.com

ன் அத்தனைத்
தவறுகளுக்குமான ....
மன்னிப்பு
உன் காதல்


Copyright : weheartit.com

ன்பே !
உன்
பார்வைக் கவிதைகளுக்காக
பத்திரமாய் பாதுகாக்கப்படுகின்றன - என்
இதய வெற்றுக்காகிதங்கள்.
  



ம் கண்களின் கல்யாணத்திற்கு - ஏனடி
என் இமைகளுக்கு விவாகரத்து...
சேர்த்து வைத்துவிடு  - நம்
முதலிரவில் அல்லது - என் 
முடிவிரவில்.


Copyright : photoblog.subpixel.eu

சுண்ணாம்பு அடிக்காமல் 
சுவற்றுச் சித்திரமாய் 
பாதுகாக்கப்படும் - என் 
சிறுவயதுக் கிறுக்கல்களாய் ...
உன் நினைவுகள் !



Copyright : http://www.fotokanal.com

ன்னவள்
வெட்டி
விட்டெறிந்த 
விரல் நகம் தான்- வானத்தின்
பிறை நிலவோ!!!


Copyright : Flickr


து !
என்னவோ தெரியவில்லை
காதல் கவிதைகள் எழுதும்
பேனாக்கள் மட்டும் 
நிரப்பப்படுகின்றன ....
காதலனின்
கண்ணீர் கொண்டு !!! 
  

Copyright : Flickr

பார்த்து செல்லடி - என் இதய சாலையில் 
பள்ளங்கள் பலவிருக்கும் - உன்னைப்
பார்த்து பார்த்து காதல் செய்ததால் !!



Copyright : Flickr


ன் உதட்டை பூட்டுகின்ற
உன்னத சாவி
அவள்  விழிகள்.

Copyright : Favim.com


ன்பே!
உன் கண்ணீர் சுட்டதால் என்னவோ!
பூப்பெய்த மறுக்கின்றன – என்
கல்லறைப் பூங்காக்கள்.



Copyright : http://hdwallpaper9.com


ரோஜா இதழ் கூட சற்று கடினம் தான் ...
உன் இதழை ஒப்பிடுகையில்!
னித்துளியில் மறைந்திருக்கும் ரோஜா இதழ்கள் ;
நீ சற்று அனுமதி தந்தாள் ..
என் இதழ் பனியில் மறையும் உன் ரோஜா இதழ்கள் !!


Copyright : newpip.blogspot.com

ன்பே
மோதல்கள்  சத்தம் தருமாமே !!
நம் கண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100 

Tuesday, June 14, 2011

♥ குட்டி குட்டி காதல் கவிதைகள் ♥

Copyright : Transformers Film


நீயும் காலன் தானடி - என்
காதலை வதை செய்ததால்
நானும் பாவம் தானடி - உன்னை
நான் காதல் செய்ததால்.  


தேவதையே !
உன் நினைவுகள்
என்னில் வரும்பொழுதெல்லாம்
நானும் பைத்தியம் தான் - என்
அறைசுவர்களுக்கு.


 
ன்பே! 
காகிதங்களின் காயங்கள்
கவிதைகள் தானடி - என்
இதயத்தின் காயங்கள் - நம்
காதல் தானடி !

 


    -   சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

ஏனடி ! இப்படி அழகானாய் ?

Copyright : http://safa.tv


னடி ! இப்படி அழகானாய் ?
அழகால் என்னைத் தின்கின்றாய்.
சொல்லடி அன்பே ஆருயிரே!
சாகவும் தோணுதே காதல் தானோ! ( பல்லவி )

ரைநொடி வாழ்தால் கூட - உன் 
அரவணைப்பில் வாழ வேண்டும் .
அடுத்தநொடி இறந்தால் கூட - உன்
மடி மீது நான் சாக வேண்டும்.  ( சரணம் - 1 )

பிரம்மன் செய்த பிழையோ- நீ
பெண்கள் கூட்டத்துத் தேவதையோ ! - என்
உயிரைக் குடிக்கும் மோகினியோ - பலர்
உயிரைக் காக்கும் தேவதையோ. ( சரணம்  -  2  )

சிரிக்காமல் சிரிப்பது எப்படியோ! - என்னுயிரைக்
குடிக்காமல் குடிப்பது எப்படியோ!
அழுகின்ற பொழுது அணைத்திடடி - நான்
அணைக்கின்ற பொழுது அச்சம் தவிர்த்திடடி. ( சரணம் - 3  )

கிறுக்கன் என்னைக் கவிஞனாக்கினாய் ;
கவிஞர்கள் பலரைக் கிறுக்கனாக்கினாய்.
அழகைக் கொண்டே ஆளைக் கொல்கிறாய்;
அகிம்சைக் கொள்கை ஏற்க மறுக்கிறாய்.    ( சரணம் - 4  )

முத்தம் கேட்டு முயன்றிடவில்லை -உன்னை
நித்தம் பார்க்க முறையிடவில்லை.
சத்தம் இன்றி நுழைந்தாயே - என்னை
நித்தம் நீயே வென்றாயே ! ( சரணம் - 5  )

 

- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Wednesday, June 1, 2011

உதிர்ப்பவள் நீ !

Copyright : 1x.com


ழை ஒதுங்கும் மாலை நேரத்தில் 
மரத்தினடியில் நான் ஒதுங்க - நீ 
விளையாட்டாய் ....  
கிளை உலுக்கி உதிர்த்துவிட்டு போன 
மழைத்துளிகளாய் ....
உன் நினைவுகள் !

திர்ப்பவள் நீ 
நனைபவன் நான் !


-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100


Sunday, April 24, 2011

மலர் vs மங்கை

Copyright : Flickr


ன் அன்பே !
பூவிதழ்கள் சிந்தும் தேனும்
பூவை நின் இதழ்கள் சிந்தும் தமிழும்
ஒன்றோ! நன்றோ!

னதில் சத்தமிடும் உன் நினைவும்
மலரை சுற்றி வரும் மணமும்
ஒன்றோ! நன்றோ!
மலர்கள் பிரசவித்த கனியும் - உன்
நினைவுகள் பிரசவித்த கவிதையும்
ஒன்றோ! நன்றோ!

காசுக்காக கடத்தப்பட்ட கனியும் - உன்
கல்யாணத்திற்காக கடத்தப்பட்ட நம் காதலும்
ஒன்றோ! நன்றோ!

ன்பே ..
கனிகளின் கல்லறை தான்
மரங்களின் கருவறை - பலர்
காதலின் கல்லறை தான்
கவிதைகளின் கருவறை.

ன் மணவறையிலும்
என் பிணவறையிலும்
நாம் வேண்டுமானால் மறித்துப்  போகலாம் - ஆனால்
நம் நினைவுகள் !!! 
       


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




Tuesday, April 5, 2011

ஒரு தலைக் காதல்

Copyright : www.lovegurusrm.in


ம் காதல் என்றுமே
கானல் நீர் !
நான் மகிழ்வதோ நீரென்று
நீ நினைப்பதோ நிஜமன்றென்று.

ண்மையில் நான் தான் வெகுளி
உலக இயல்பு தெரியாத கோமாளி
அன்பை நாடும் அறிவிலி – மொத்தத்தில்
நீ ஒரு அறிவாளி.

ன்னுடன் உலகம் சுற்ற வேண்டும் – என்று
ஓராயிரம் முறை நினைத்திருக்கிறேன்;
உண்மையில் உன் உலகில்
ஓர் மூலையில்கூட நானில்லை – என்று
அண்மையில் தான் உணர்ந்திருக்கிறேன்.

ன்னுடைய நட்பு வட்டம்
உன்னுடைய நலம்விரும்பிகள்
உன்னுடைய ஆதரவாளர்கள்
உன்னுடைய அன்புக்குரியவர்கள்
அனைவருக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ அறிவாய்
இவனுக்கும் உன்னைப் பிடிக்கும்
அதை நீ மறைப்பாய்.

ன்னை சந்திக்கும் பல சமயங்களில்
மௌனம் மட்டும் என் மொழியாக …
புன்னகை மட்டும் உன் பதிலாக.

காதல் பிச்சை ” கேட்கிறேன் – அது ஏனோ
தெரியவில்லை – என்னிடம் வரும் பொழுது மட்டும்
உனது பைகளில் பணமிருப்பதில்லை.

செய்வதைக் காட்டிலும் சொல்வது மேலானது
அன்பில்லா இடத்தில்…
சொல்வதைக் காட்டிலும் செய்வது மேலானது
அன்புள்ள இடத்தில்;

நீயே முடிவு செய்து கொள்
சொல்வதா! செய்வதா! என்று.

நான் தவறானவன் தான் – உன்
தகுதிக்கு குறைவானவன் தான்.
அறிவுக்குத் தெரிகிறது – பாவம் என்
அகம் மட்டும் அழுகிறது.
படிப்பிலும், பண்பிலும்,
பக்குவத்திலும், பழகுவதிலும் – நீ
புதியவள் – எனக்கு மட்டும்
புதிரானவள்.

ன் காதலும், கவிதையும் என்றுமே
உனக்கு நடிப்பு… – என்னை
நடிகனாய் அங்கீகரித்த முதல்
பல்கலைக்கழகமே
நன்றி !

ன்னுடையது
ஒரு தலைக் காதலா?
” இல்லை “
ன்று நீ சொல்லும் வரைக் காத்திருப்பேன்
ஒரு தலைக் காதலுடன் .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...